Advertisement

Responsive Advertisement

அம்பாறை பொத்துவில் பகுதி விபத்தில் தந்தையும் மகனும் பலி , தாயும் மகளும் படுகாயம்


அம்பாறை பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏத்தம் குஞ்சான் ஓடைப்பாலத்தின் அருகில் நேற்று (19) இரவு 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியாகியதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  


திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த குடும்பமொன்று மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளது. அச்சைக்கிள், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன்  மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. 


  டி.ஜெயந்திரன் (வயது 35), அவரது மகன் ஜெ.கஜேய் (வயது 08) ஆகியோர் பலியான அதேவேளை, மனைவியான ஜெ.கிருஸ்ணகலா (வயது 28) மகள் ஜெ.கஜானி (வயது 03) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவரும் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். 

பொத்துவிலில் இருந்து  திருக்கோவில் பிரதேசத்தை நோக்கி  பயணித்துக் கொண்டிருக்கும் போது முன்னால் வந்த வாகனமொன்றிற்கு வழிவிட முயற்சிக்கும் போதே சைக்கிள், உழவு இயந்திர பெட்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

Post a Comment

0 Comments