Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவுக்கான கட்டிடம் அமைக்கும் பணிகள்

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவுக்கான கட்டிடம் அமைக்கும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பித்துவைக்கப்பட்டன.
கல்வி அமைச்சின் 80மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த ஆரம்ப பிரிவு அமைக்கப்படவுள்ளது.
வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி கனகசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தபால் திணைக்களத்திற்கு சொந்தமான காணியாக இருந்த குறித்த காணியை கடந்த காலத்தில் பாடசாலைக்கு பெற்றுக்கொடுப்பதற்காக முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
அதன் அடிப்படையில் அந்த காணி வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலைக்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பாடசாலையின் ஆரம்ப பிரிவு அமைக்கப்படவுள்ளது.IMG_0336

Post a Comment

0 Comments