உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அதிகரிக்கப்பட்ட வற் வரியை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ள போதும் இன்னும் தொலைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் அறவிடும் அழைப்புக் கட்டணங்களுக்கான வரியை குறைக்க நடவடிக்கையெடுக்கவில்லை.
இதன்படி தொடர்ந்தும் 46வீத வரியையே அறவிட்டு வருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமக்கு இன்னும் அரசாங்கத்திடமிருந்து உரிய அறிவிப்பு கிடைக்கவில்லையென அந்த நிறுவனங்கள் காரணம் கூறுவதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அரசாங்கம் விரைவில் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 Comments