அருட் சகோதரர் கலாநிதி . எஸ் . ஏ. ஐ. மத்தியு அவர்களுடைய இறுதி அஞ்சலி நடைபெற்று அன்னாரின் சடலம் கல்முனை மயானத்தில் இன்று பி.ப .5.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப் பட் டது.
புகழ்பெற்ற கல்விமான்,; கல்முனை கார்மேல் பாத்திமாக் கல்லூரியின் முன்னாள் அதிபர், ஓய்வு பெற்ற அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர், எழுத்தாளர் மற்றும் சமூக சேவகருமாக கடமையாற்றிய றோட்டறியன் அருட்சகோதரர் கலாநிதி எஸ்.ஏ. ஐ. மத்தியூ சுகவீனமுற்றிருந்த நிலையில் தனது 77 ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை காலமானார்.
கார்மேல் பாத்திமாக் கல்லூரியின் வளர்ச்சிக்கும் எழுற்சிக்கும் பாடு பட்ட மகான், 1978 சூறாவளியின் தாக்கத்தினால் பாடசாலைக் கட்டிடங்கள அழிந்தபோது உடன் கொட்டில்களை அமைத்து மாணவர்களின் கல்விக்காக தன்னை அர்ப்பணித்தார்.
தனது அர்ப்பணிப்புமிக்க சேவையைப்போல் ஆசிரியர்களும் சேவை செய்ய வேண்டும் என்பதில் திடகாத்திரம் கொண்டிருந்தார். பிழையை உடன் சுட்டிக் காட்டி உரிய நடவடிக்கை எடுப்பதில் மிகத் தீவிரமாக இருந்தவர். அவரது தீக்கதரிசன முயற்சியினால் இன்று கல்முனை கார்மேல் பாத்திமாக் கல்லூரி கல்வியின் சிகரமாய் காட்சியளிக்கின்றது.
அவரது அத்மா நித்திய நிலையான சாந்தி பெற கல்லூரியின் மாணவர்கள், உள்ளிட்ட கல்விசார் உத்தியோகத்தர்கள் அனைவரும் பிரார்த்திக்கின்றனர்.
0 comments: