மட்டக்களப்பு கல்லடி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று மாலை இடம்பெற்ற கைகலப்பில் இருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்லடி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று மாலை உணவு கொள்வனவு செய்வதற்காக கல்லடி பகுதியை சேர்ந்த நபர் சென்ற வேளையில் உணவகத்தில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த நபர் ஊருக்குள் சென்று சிலரை அழைத்து சென்று உணவக உரிமையாளரிடம் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதுடன் உணவகத்திற்கும் சேதம் விளைவித்துள்ளனர் .
இதன் காரணமாக காயங்களுக்கு உள்ளான நிலையில் உணவக உரிமையாளரும் அவருடன் இருந்தவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். .
0 Comments