வெயங்கொட பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையை அங்கிருந்து அகற்றுமாறு பிரதேசவாசிகளினால் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று முதல் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் கையொப்பங்களை பெற்று அரசாங்கத்திற்கு அனுப்ப நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு சில வருடங்களுக்கு முன்னர் மக்களின் எதிர்ப்புகளையும் மீறி தந்திரமான முறையில் அங்கு ஆயுத களஞ்சியசாலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கொஸ்கம சம்பவத்தின் பின்னர் தமக்கும் அதே நிலைமை ஏற்படக் கூடுமெனவும் தெரிவித்து அந்த பிரதேச மக்கள் அதனை அங்கிருந்து அகற்றுமாறு வலியுறுத்த தீர்மானித்துள்ளனர்.
0 Comments