உயிருக்கு போராடிய நிலையில் கோடியக்கரை கடலில் தத்தளித்த இரண்டு வயதான சிறுமி ஒருவர் உள்ளிட்ட இலங்கையர்கள் மூவரை தமிழக மீனவர்கள் மீட்டுள்ளனர்.
வவுனியாவை சேர்ந்த 27 வயதான துஷ்யந்த், 24 வயதான துவாரக மற்றும் இரண்டு வயதான காகிதா ஆகியோரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் சட்ட விரேதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளைின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், உணவு மற்றும் குடிநீர் எதுவும் இன்றி சில நாட்களாக கடலில் தத்தளித்துகொண்டிருந்த நிலையில், தமிழகத்தின் நாகப்பட்டினம் மீனவர்களினால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, மீட்கப்பட்ட மூவருக்கும் முதலுதவி மற்றும் உணவு வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments