Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் குருக்கேத்திரன் போர்வடமோடிக் கூத்து

குருக்கள்மடம் கிராமத்தில் பாரம்பரிய கலைகளின் பயில்வு சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்தது. ஆனால் கடந்த 30 ஆண்டுகளான அம்மக்களால் கலைப்பயில் வைமுன்னெடுக்க முடியாத ஒரு துற்பாக்கிய சூழ்நிலை காணப்பட்டது. இக்கலைகளைத ங்களின் சமூகவாழ்வின் ஒருபகுதியாக பயின்று வந்தமக்களுக்கு அவை அவர்களின் வாழ்வியல் அனுபவத்திலிருந்து அந்நியப்பட்டது கவலைக்குரியதாகவும் கருதியதுடன் அவற்றைமீண்டும் தங்களின் வாழ்வியல் சூழலுக்குள் உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்றும் ஆர்வம் உடயவர்களாகவும்விளங்கினர். இருந்தும் அவர்களின் முயற்சிகள் செயற்வடிவம் பெறுவதற்கானவாய்புக்கள் ஏற்படவில்லை. 


இவ்வனுபவத்தின் பின்புலத்தைவிளங்கிக் கொண்டுகுருக்கள்மடம் கிராமத்தில் மீண்டும் கூத்துச் செயற்பாடுகளைஆரம்பிப்பதற்குரியமுயற்சிகலாநிதிவடிவேல் இன்பமோகன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அவருக்குஉதவியாகநுண்கலைத்துறைவிரிவுரையாளர்திரு.சு.சந்திரகுமார்மற்றும் திரு.ப.இராஜதிலகன் ஆகியோர்செயற்படுகின்றனர்.இதற்கானசகலஆதரவையும் அக்கிராமத்தின் வரலாற்றுப் பழமைமிக்கஆலயமான ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காமசுவாமிஆலயத்தின் தற்போதையதலைவர்திரு. வீ.மகேஸ்வரன் தலைமையிலானநிர்வாகசபையினர்வழங்கினர். ஆலய நிர்வாகத்தினர்முழுஅக்கறையுடன் செயற்படுவதுஅக்கிராமமக்களுக்கும், கூத்துசெயற்பாட்டுடன் தங்களைஅர்பணித்தகலைஞர்களுக்கும் பெருமகிழ்ச்சிக்குரியவிடயமாகஅமைந்திருந்தது. 

குருக்கள்மடம் கிராமத்தில் 1960 களில் அக்கிராமகலைஞர்களினால் பயிலப்பட்டுஅக்காலத்திலும்,மட்டக்கப்பின் பலபாகங்களிலும் ஆடப்பட்ட“குருக்கேத்திரன் போர்” வடமோடிக் கூத்தைஆடவேண்டும் எனதீர்மானிக்கப்பட்டு 06.06.2016 திங்கள் கிழமை ஆலய முன்றலில் சம்பிரதாயபூர்வமாகஇதற்கானபூர்வாங்கசெயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது. சட்டம் பொடுத்தல் நிகழ்வைஎதிர்வரும் புதன்கிழமை (22.06.2016) நடாத்துவதுஎனத் திர்மானிக்கப்பட்டுள்ளது. இக்கூத்தில் அக்கிராமத்தைச்சேர்த்தகலைஞர்கள் பங்குபற்றுகின்றனர்.

இக்கூத்தின் அண்ணாவியார்சித்தாண்டியைச் சேர்ந்தவே.தம்பிமுத்துஆவார். இவர்வடமோடி,தென்மோடிக் கூத்தில் தேர்ந்தபுலமைத்துவம் உடயவர். இவர்கிழக்குப் பல்கலைக்கழகநுண்கலைத்துறைமாணவர்களுக்கு கூத்தைபயிற்றுவிப்பதற்குவருகைதருகலைஞராக பணியாற்றுபவர். 




Post a Comment

0 Comments