Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொஸ்கமவில் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு மாதம் 50 ஆயிரம் ரூபா!

கொஸ்கம் சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வரை மாதாந்தம் தலா 50 ஆயிரம் ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், முழுமையாக மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அவர கூறியுள்ளார்.
அதேவேளை சிறுசேதம் ஏற்பட்ட வீடுகளை இராணுவத்தினர் விரைவில் புனரமைத்துக் கொடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments