கடந்த மாதம் அரநாயக்கவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் மூன்று பேரின் சடலங்கள் நேற்று 15ஆம் திகதி மீட்கப்பட்டுள்ளன.
பிரதேசவாசிகளினால் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் இந்த சடலங்கள் அடையாளம் காண முடியாதவாறு பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற இந்த மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி 200ற்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருந்த நிலையில் அவர்களில் 30 பேர் வரையானோரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டிருந்தன.
இதேவேளை அந்த பிரதேசத்தில் கடந்த 30ஆம் திகதியுடன் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments