பஸ் கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிக்க வேண்டுமெனவும் இல்லையேல் சேவை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் சில அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பாக அரசாங்கம் அறிவிக்க வேண்டுமெனவும் இல்லையேல் அன்றைய தினம் முதல் போராட்டங்களை ஆரம்பிக்கப் போவதாக அவை தெரிவித்துள்ளன.
இதன்படி பஸ் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதுடன் ஆகக் குறைந்த கட்டணத்தை 8ரூபாவிலிருந்து 10 ரூபா வரை அதிகரிக்க வேண்டுமெனவும் அந்த சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தெற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் , அனைத்து மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் ஆகியன இணைந்து நேற்று நடத்திய ஊடக சந்திப்பொன்றில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments