மலையகத்தில் இடி – மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை பொரஸ்ட்கிறிக் தோட்டத்தில் உள்ள பல வீடுகளின் மீது இடி – மின்னல் தாக்கியதன் காரணமாக அவ்வீட்டிலிருந்த மின்பாவனைப் பொருட்கள் பல சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலுள்ளவர்கள் வேலை செய்துக்கொண்டிருந்த வேளையில் இவ்வீடுகளின் மீது இடி மின்னல் தாக்கியதாகவும் இதன்போது வீட்டிலிருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments: