முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நிகழ்த்தப்பட்ட 7 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு தமிழ் தேசம் முழுவதும் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவு கூரப்பட்டது. பிரதான நிகழ்வு வடமாகாண சபையின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்றது.
வடக்கு மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரன் சுடரேற்றி நிகழ்வை ஆரம்பித்துவைத்தார். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்றது. இந்த அஞ்சலி நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றன. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலர் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
வட மாகாண சபை உறுப்பினர் துரைராஜா ரவிகரன் இன்று காலை நந்திக்கடலுக்கு சென்று அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வாகரையில் நினைவு கூரல் நிகழ்வுகள் நடைபெற்றன.








0 Comments