Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு,ஏறாவூர் பகுதியில் பஸ்ஸில் மோதுண்டு குடும்பஸ்தர் மரணம்

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரி;விலுள்ள மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலை ஏறாவூர் 4ஆம் குறிச்சி பஸார் பகுதியில் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஏறாவூர் ஐயங்கேணியைச் சேர்ந்த சீனிமுஹம்மது ஜமால் (வயது 48) எனும் மாட்டிறைச்சிக் கடைத் தொழிலாளியே மரணமானவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த காத்தான்குடி டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸில் ஏறாவூர் பிரதான வீதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மோதியதில் இந்த மரணம் சம்பவித்துள்ளது.
பஸ்ஸினால் மோதுண்டவர் ஸ்தலத்திலேயே மரணமாகியுள்ளார்.சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை ஏறாவூரைச் சேர்ந்த பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு பஸ்ஸ{ம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
சைக்கிளில் தடுமாறிச் சென்று கொண்டிருந்தவரை விபத்தில் இருந்து தடுப்பதற்காக தான் முடிந்தவரை முயற்சித்து பஸ்ஸை விலக்கி தெருவின் அடுத்த பக்கம் வரை கொண்டு சென்றபோதும் விபத்து இடம்பெற்று விட்டதாக பஸ் சாரதி பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்திலேயே இந்த விபத்து சம்பவித்தது.
ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தலைமையிலான பொலிஸார் ஸ்தலத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டனர்.மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Post a Comment

0 Comments