கேகாலை மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாகவும் இதனால் மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டுமெனவும் தேசிய கட்டிட ஆராச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக அரநாயக்க , புலத்கொஹுபிட்டிய , எட்டியாந்தோட்டை மற்றும் தெரணியாகல பகுதிகளில் பாரிய மண்சரிவுகளுக்கான அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதேசங்களில் நிலங்களில் வெடிப்பு , திடீர் ஊற்று , சேற்று நீர் ஊற்றிலிருந்து வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் அல்லது நிலத்தில் வேறு மாற்றங்கள் தென்படின் உடனடியாக அந்த பிரதேசத்திலிருந்து வெளியேறுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த பிரதேசங்களில் ஏஎற்கனவே பல இடங்களில் மக்கள் மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments