Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு தாழங்குடா சமுர்த்தி வங்கியில் கொள்ளை முயற்சி

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் உள்ள சமுர்த்தி வங்கி ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கொள்ளையிட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் உள்ள குறித்த சமுர்த்தி வங்கி அலுவலகத்தின் கூரை பிரிக்கப்பட்டு உள்நுழைந்தபோதிலும் எதுவித பொருட்களும் கொள்ளையிடப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் ஆவனங்கள் எதுவும் திருடப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வங்கி கடந்த ஆண்டும் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments