Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தாஜுதின் கொலை விவகாரம் : சந்தேக நபர்கள் இந்த வாரத்தில் கைதாவர்?

தாஜுதினின் மரணத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கடந்த வாரம் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் தற்போது முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட 8 பேர் இந்த வாரத்திற்குள் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை விசாரணைக்காக வருமாறு நாமல் ராஜபக்‌ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர் அந்த அழைப்பை நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இந்த வாரத்திற்குள் அவர்கள் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அந்த மரணம் தொடர்பாக சம்பவம் இடம்பெற்ற பகுதியில் சீ.சீ.டி.வீ கமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகள் ஆய்வுக்காக கனடா நிறுவனமொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments