அம்பாறை – ஒலுவில் துறைமுகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சனிக்கிழமை பார்வையிட்டுள்ளார்.
அம்பாறை பாலமுனை விளையாட்டரங்கில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் 19 ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டதன் பின்னரே ஒலுவில் துறைமுகத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்.
அத்துறைமுகத்தின் இறங்குதுறை மற்றும் களஞ்சியம் ஆகியவற்றை பார்வையிட்ட ஜனாதிபதி, துறைமுக ஊழியர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், சிறந்த செயற்திட்டம் மூலம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் அவசியம் பற்றியும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்தில் கொள்ளப்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர் அனோமா கமகே, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி உள்ளிட்ட குழுவினர் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments