திருகோணமலை மாவட்டம் சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்க வேண்டாம், நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்துமாறு கோரி நேற்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
இந்த இடத்திற்கு வருகை தந்த சம்பந்தன் எம்பி. “இந்த காணி கிடைத்ததே பெரிய விடயம்- போன காணி கை விட்டு போய் விட்டது. இனிவரும் காலங்களில் நாங்கள் உங்களின் குறைகளை தீர்த்து வைக்கின்றோம்”. எனத் தெரிவித்தார்.
இந்தக் கருத்தால் கொதிப்படைந்த மக்கள் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சுற்றி வளைத்து எங்கள் பிரச்சினைகளுக்கு நீங்கள் நினைத்தால் தீர்வினைப் பெற்றுத் தர முடியும் என ஆவேசத்துடன் கேள்விகளை எழுப்பினர்.
குறித்த கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்ல முடியாமல் திணறிய சம்பந்தன் எம்.பி முகத்தை திருப்பி நின்றார். பின்னர் சிறிது சமாளித்துவிட்டு பாதுகாப்புடன் பஜிரோவில் ஏறிச் சென்றார்.
சூழலை பாதுகாப்போம் – எதிர்காலத்தை காப்போம், எமது சூழலை பாதிக்கும் அனல் மின் நிலையத்தை ஆரம்பிக்காதே!, இந்திய வல்லரசின் நன்மைக்காக வாழ்வை அழிக்காதே போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கூனித்தீவு, கட்டைப்பறிச்சான், சேனையூர், சூடக்குடா, கடற்கரைசேனை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
0 comments: