Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அதிபர் போட்டிப் பரீட்சையில் போதியளவானவர்கள் சித்தியடையவில்லை! கல்வியமைச்சு தகவல்

அண்மையில் நடைபெற்ற அதிபர்களைத் தெரிவு செய்யும் போட்டிப் பரீட்சையில் அதிகளவானோர் சித்தியடையவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தரம் மூன்று அதிபர் பதவி வெற்றிடத்திற்காக இணைத்துக் கொள்ளும் நோக்கில் போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது.
இந்தப் போட்டிப் பரீட்சையில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவையானளவர்கள் கூட சித்தியடையவில்லை.
அதிபர் சேவையில் இணைந்து கொள்வதற்காக 19000 பரீட்சார்த்திகள் போட்டிப் பரீட்சையில் தோற்றிய போதிலும், 4070 பேர் மட்டுமே சித்தியடைந்துள்ளனர்.
இதன்படி, வெற்றிடமாக காணப்படும் 5600 அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு போதியளவானவர்கள் சித்தியடையவில்லை.
இதனால் தொடர்ந்தும் 1524 அதிபர் வெற்றிடங்கள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.
இதேவேளை, மார்ச் மாத இறுதிக்குள் அதிபர் பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் நியமனங்களும் இரண்டு வார கால பயிற்சியும் அளிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டின் பின்னர் அதிபர் வெற்றிடங்களுக்கான பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் அதிபர் பரீட்சைகள் நடத்தப்பட்டு வெற்றிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments