கூட்டு எதிர்க்கட்சியினரின் முதலாவது மக்கள் கூட்டம் அரசாங்கத்துக்கு எதிரான பேரணியாக மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. தலைமையில் வரும் 17 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு ஹைட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தின்போது இராணுவத்திற்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்துமாறும், விவசாயிகளுக்கான நிவாரணங்கள் நிறுத்தப்பட்டமையை கண்டித்தும், உள்ளூராட்சி தேர்தலை உரிய நேரத்தில் நடத்தக் கோரியும் பேரணியும் நடத்தப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறும் இந்தப் பேரணியிலும் கூட்டத்திலும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பர் என்றார்.
0 Comments