Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு சித்தாண்டியில் விபத்து ஒருவர் மரணம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதி மாவடிவேம்பு பகுதியில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், அவருடன் பயணித்தவர் படு காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . 
 கிரான் விஷ்ணு ஆலய வீதியைச் சேர்ந்த குணராசா குணநிதன் (வயது 21) என்பவரே மரணமடைந்துள்ளார்.     கிரானிலிருந்து  மட்டக்களப்பு நோக்கி செல்லும்போதே   இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
அதி வேகம் காரணமாகவே எதிரே வந்த மோட்டார் வண்டியுடன் மோதி அருகிலிருந்த மின் கம்பத்துடன் மோதுண்டுள்ளது என ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Post a Comment

0 Comments