வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய விளையாட்டுத்துறை ஆசிரியரை அதிகார துஸ்பிரயோகத்தின் மூலம் இடமாற்றம் செய்துள்ளதாக தெரிவித்து மாணவாகள் இன்று பாடசாலைக்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் பாடசாலைக்கு ஒவ்வாத சீருடை தொடர்பாக நடவடிக்கை எடுத்தமையாலும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் மகனது சீருடை தொடர்பாகவும் நடவடிக்கை எடுத்தமையால் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மாணவர்கள் இவ் இடமாற்றத்தை நிறுத்தக்கோரியே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதேவேளை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாயலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த மாணவர்கள் பின்னர் பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள வலயக்கல்வி அலுவலகத்தின் வாயிலையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது வலயக்கல்விப்பணிப்பாளரே நித்திரையா, எமது ஆசிரியரை எமக்குத்தா. ஒழுக்கம் தெடர்பாக நடவடிக்கை எடுத்தால் இடமாற்றம் செய்வாயா. அதிகார துஸ்பிரயோகம் செய்யாதே, மகாவிததியாலயத்தை வீழ்த்த நினைக்காதே என்ற கொசங்களை எழுப்பியதோடு பதாதைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தாங்கியிருந்தனர்.
இந் நிலையில் ஏ9 வீதியில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமையால் பொலிஸார் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டு பொக்குவரத்தை சீர்செய்தீருந்ததுடன் பொலிஸாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குள் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸாரின் பின்புறமாக பாதுகாப்பான முறையில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த கல்வித்திணைக்கள அதிகாரியொருவர் ஊடகவியலாளர்களை வெளியே செல்லுமாறு பணித்ததுடன் செய்தியை பூதாகாரமாக்கவேண்டாம் எனவும் எச்சரித்திருந்தார்.
0 Comments