அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் காணாமல் போனவர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம.பெற்றிருந்தது.
திருக்கோவில் 2 கிராம அபிவிருத்திக் சங்க கட்டட வளாகத்தில் இடம்பெற்ற அவ்வார்ப்பாட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் கலந்து கொண்டனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் போனவர்களின் உறவுகள், “காணாமல் போன எங்கள் உறவுகளுக்கு என்ன பதில்?, இனிமேல் இலங்கையில் காணாமல் ஆக்கப்படமாட்டாது என்று அரசு ஐ.நாடுகள் சபையிடம் வழங்கி உறுதியை நிறைவேற்று, காணாமல் போன உங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது உண்மையை அரசு தெரியப்படத்த வேண்டும்,
காணாமல் போன ஒவ்வொரு உறவுகளின் காணாமல் போன காலம் முதல் இன்றுவரை நட்டஈடு அரசு வழங்க வேண்டும் போன்ற சுலோக அட்டைகளை ஏந்தி கண்ணீர் வடித்து அழுது புலம்பினர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பின் டி.கலையரசன் கலந்து கொண்டு ஆர்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன்,
இவ் ஆர்ப்பாட்டத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் தாயாரும் கலந்து கொண்டு எனது மகனை மீட்டுத் தேடித்தாருங்கள் என கண்ணீமல்க வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த மற்றுமொரு பெண்,
எனது கணவனை நான் கையில் பிடித்துக் கொண்டு சென்று இராணுவத்திடம் கொடுத்தேன் அவரை விசாரித்து விட்டு விடுவதாக கூறிய போது இதுவரை அவர் வீடு திரும்பவில்லை.
எனது கணவர் உயிருடன் தான் இருக்கின்றார். உடனடியான விடதலை செய்யுங்கள் நான் பொட்டும், தாலியுடன் நடைபிணமாக வாழ்ந்து வருகின்றேன்.
எனது பிள்ளை ஏனைய பிள்ளைகளின் தந்தைமார் பாடசாலைக்கு பிள்ளைகளை சைக்கிலில் கொண்டு சென்று விடும் போது எனது பிள்ளை என்னிடம் கேட்கின்றான்.
எனது அப்பா எப்போது வந்து என்னையும் சைக்கிலில் கொண்டு சென்று பாடசாலைக்கு விடுவார் என கேட்கின்றான் அப்போது எனது இதயம் வெடிப்பது போல் உள்ளது என்றார்.
இன்று நாடு பூராகவும் சுதந்திர தினம் கொண்டாடப்படும் போது நாங்கள் மடடும் கண்ணீரும்,கவலையுமாக உறவுகளை பிரிந்து வாழ வேண்டும்.
இந்த நல்லாட்சி அரசு எங்களை இன்னும் வேதனைகளையும், துன்பங்களையும் கொடுக்காது எமக்கு ஒரு விடிவினை பெற்று கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் போன உறவுகளின் உறவுகள் மன்றாட்டமாக அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

0 Comments