தனது ஆட்சிகாலத்தில் தன்னுடன் அமைச்சர்களாக இருந்தவர்கள் அவ்வாறு இருக்காததை போன்றே தற்போது கதைத்துக்கொண்டிருப்பதாகவும் அப்போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட அவர்களின் பிள்ளைகளுக்கு எதிராக தான் நடவடிக்கையெடுக்காமலிருந்ததை எண்ணி கவலையடைவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனது பிள்ளைகளை பழிவாங்க ஆரம்பித்துள்ளனர். வேண்டுமென்றால் என்னை கைது செய்து சிறையில் அடையுங்கள். அப்போது எனது அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் அதனை மறந்து கதைக்கின்றனர். நான் அப்போ அவர்களின் பிள்ளைகள் குற்றச் செயல்களில் ஈடுபடும் போது அவர்கள் தொடர்பாக நடவடிக்கையெடுக்காதது தவறுதான். இதில் தற்போதைய ஜனாதிபதியின் மகனும் ஒருவரே. என அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments