வெலிக்கடை சிறைச்சாலையில் முக்கிய பிரமுகர்களை சிறை வைக்கும் சிறையொன்று சுத்தம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சிறைக் கூடம் தற்போது சிறைக்காவலரின் கண்கானிப்பின் கீழ் அவசர அவரமாக சுத்தம் செய்யப்பட்டு வருவதாகவும் இது முக்கிய பிரமுகர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளார்.
என்பதனையே எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இறுதியாக அந்த சிறையில் முன்னாள் இராணுவ தளபதியான சரத் பொன்சேகாவே  சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும் அவருக்கு பின்னர் யாரும் அதில் சிறை வைக்கப்பட்டிருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.


0 Comments