பண்டாரவளையிலிருந்து, சப்ரகமுவை நோக்கி பயணித்த பஸ்ஸொன்று ஹப்புத்தளையில் கன்டர் ரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 25 மாணவிகள் உட்பட 27 பேர் தியத்தலாவை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இவ்விபத்தில் பஸ்ஸின் சாரதி மற்றும் கன்டர வாகனத்தின் சாரதி ஆகியோரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments