அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
காரைதீவு 12ச் சேர்ந்த, 02 பிள்ளைகளின் தந்தையான தம்பிப்பிள்ளை பிறைசூடி (40 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:
மரமேறும் கலையைப் பிரதான தொழிலாகக் கொண்டுள்ள குறித்த நபர் நேற்று இரவு 8.00 மணியளவில் தனது வீட்டு முற்றத்தில் உள்ள கிட்டத்தட்ட 60 அடி நீளமுள்ள இலவம்பஞ்சு மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளார்.
இதற்கிடையில் தனது மனைவி ஏற்கனவே வெளிநாடு சென்று திரும்பியிருந்த நிலையில் அவர் மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று கணவனிடம் கூறியதாகவும்,
அதற்கு அவர் "நீ மீண்டும் வெளிநாடு சென்றால் இவ்வாறே தூக்கில் தொங்குவேன்" என விளையாட்டிற்காக நடித்துக்காட்டிய வேளையில் அவரின் உயிர் பிரிந்து சென்றதாகவும், உயிரிழக்கும் போது குறித்த நபர் குடிபோதையில் இருந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.
இதேவேளை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேற்று இரவு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் ஏ.எம். நசீல் நேரடியாகச் சென்று பார்த்ததோடு,
சுமார் 40 அடி தூரத்தில் தொங்கிய சடலத்தினை கீழே இறக்குவதற்கான உத்தரவினப் பிறப்பித்த போதும், பொதுமக்களும், பொலிசாரும் இணைந்து குறிப்பிட்ட சடலத்தினை கீழே இறக்க முயற்சிகளை செய்த போதும் இரவு 11.30 மணியை தாண்டியதால் அம்முயற்சி கைக்கூடவில்லை.
இன்று காலையிலேயே குறித்த சடலம் கீழே இறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments