கிளிநொச்சி நகரின் பிரபல பாடசாலை ஒன்றின் மாணவியின் தற்கொலை முயற்சிக்கு காரணமாக இருந்த ஆசிரியரை எதிர்வரும் 4ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி நகரில் உள்;ள பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த வியாழக்கிழமை தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரை மேலதிக வகுப்பிற்காக அழைத்து விட்டு குறித்த மாணவி மீது ஆசிரியர் ஒருவர் தவறாக நடக்க முற்பட்டவர் என்றும் இதனால் குறித்த மாணவி கடிதம் ஒன்றை எழுத்தி வைத்து விட்டு கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்வதற்கு முயற்சித்து அயலவர்களால் காப்பாற்றப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இச்சம்பவம் தொர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிளிநொச்சிப் பொலிசார் இச்சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படும் குறித்த ஆசிரியரை நேற்று (20-02-2016) கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த ஆசிரியரை நேற்று (21-02-2016) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் திரு.எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து குறித்த ஆசிரியரை எவரும் 4ம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பான செய்தி சேகரிக்க சென்றிருந்த இரு ஊடகவியலாளர்களை சம்பவத்துடன் தொடர்பான பாடசாலையின் உப அதிபர் மற்றும் ஆசிரியரின் உறவினர் ஆகியோரால் கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.


0 Comments