நாட்டில் ஐக்கிய கட்டமைப்பின் கீழ் சமஷ்டி முறைமை வலுப்படுத்துமாறு, மகாத்மா காந்தியின் பேரனும் இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகருமான கோபாலகிருஷ்ணகாந்தி கோரியுள்ளார்
ஜனாதிபதி சிறிசேனவின் ஒரு வருட பதவிகால பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பழைய அரசியல் யாப்புகளால் சமஷ்டி முறைமைக்கு பாதிப்புகள் இருந்தன.
இந்த நிலையில் தற்போது அதனை சக்திமயப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள், தமிழ் மக்களை மீண்டும் அதிருப்திக்கு உள்ளாக்க கூடாது என்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
0 Comments