Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கஞ்சா வைத்திருந்த இரண்டு பெண்கள் மட்டக்களப்பில் கைது

விற்பனைக்காக தம் வசம் கஞ்சா வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஒரு வயோதிபப் பெண்ணும் ஒரு இளம் பெண்ணும் இன்று கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சித்தாண்டி கிராமத்தைச் சேர்ந்த 51 வயதான பெண்ணிடமிருந்து 1100 மில்லி கிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன் அந்தப் பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
அதேவேளை, கோரகல்லிமடு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணிடமிருந்து 3480 மில்லி கிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரான பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments