Advertisement

Responsive Advertisement

ஜெனீவா பிரேணை முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்

ஜெனீவா பிரேணை முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதில் பிரித்தானியா தெளிவாக இருப்பதாக இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரித்தானிய  உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு தொடர்பில் கடந்த தினங்களில் சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி வந்தன.இது குறித்து அவரிடம் வினவிய போது, இது குறித்த கருத்துக்களை தெரிவிப்பதைவிட, ஜெனீவா பிரேரணையின் அமுலாக்கத்தில் அவதானம் செலுத்துவது சிறந்தது என்று கூறியுள்ளார்.
இந்த பிரேரணையில் இலங்கை அரசாங்கம் பயணிக்க வேண்டிய பாதை தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதனை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எவ்வாறான திட்டங்களை வகுத்துள்ளது என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
எனினும் இந்த ஆண்டு ஜுன் மாதத்துக்கு முன்னதாக குறித்த பிரேரணையின் அமுலாக்கம் குறித்த முதற்கட்ட அறிக்கை, மனித உரிமைகைள் ஆணையகத்தில் முன்வைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments