“முழுக்குடும்பத்தையும் கைது செய்து, அதுவும் போதாது என்று என்னை சிறையில் அடைத்தாலும் 1936 இலிருந்து வந்த அனுபவமும் முதிர்ச்சியும் ராஜபக்ஸ குடும்பத்திற்கு இல்லாது போகாது” என்று தனது மகன்
யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
மகிந்தவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ச பல தடவைகள் சிறைக்கு சென்று வந்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர் யோசித கைதுசெய்யப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட சில படங்களையும் பிரசுரித்துள்ளார்.
இதேவேளை மாத்தளையில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ராஜபக்ஸ கைதுகள் மூலம் ராஜபக்ஸவினரின் அரசியல் பயணத்தை எவரும் தடுத்துவிட முடியாது என்று கூறயுள்ளார்.
0 Comments