மொரட்டுவ பகுதியில் இன்று அதிகாலை வானொன்று வீதியை விட்டு விலகி மரண வீடொன்றுக்கு முன்னால் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அவ்விடத்தில் இருந்த 17 மற்றும் 20 வயது இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்தையடுத்து கோபமடைந்த பிரதேசவாசிகள் அந்த வான் மீதும் மற்றும் வானின் சாரதி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த விபத்துச் சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் பாணந்துர வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments