கிளிநொச்சி அறிவியல் நகா் பகுதியில் அமைந்துள்ள வானவில் (மாஸ்) ஆடைத்தொழிற்சாலை ஊழியா்கள் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவா்கள் ஒன்று திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனா்.
குறித்த ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றிய ஆளணி முகாமையாளா் ஒருவா் காரணமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிா்ப்புத் தொிவித்தே தாங்கள் ஆா்ப்பாட்டத்தில் ,ஈடுப்பட்டுள்ளதாக ஊழியா்கள் தொிவித்துள்ளனா்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஆளணி முகாமையாளா் ஊழியா்களின் நலன்களில் அதிக அக்கறை கொண்டவா் ஊழியா்களின் நலன்கள்,உாிமைகள் தொடா்பில் நிறுவனத்தின் உயா்மட்டத்துடன் அடிக்கடி பேசுபவா் என்பதோடு எல்லா ஊழியா்களின் விடயத்திலும் அக்கறையோடு செயலாற்றுகின்ற அதிகாரியாக காணப்படுகின்றவா் இந்த நிலையிலேயே அவா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா் எனவேதான் நாம் அவா் பணி நீக்கம் செய்யப்பட்டக்கான காரணம் தெரிவிக்கப்படுவதோடு அவரை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்படுகின்றோம் ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவா்கள் தெரிவிக்கின்றனா்.
இது தொடா்பில் வானவில் (மாஸ்) ஆடைத் தொழிற்சாலை அதிகாரிகளின் கருத்தை பெற முயன்ற போது தாங்க்ள எவ்வித கருத்தையும் தெரிவிக்க முடியாது எனவும் கொழும்பிலிருந்து வருகின்ற அதிகாரிகளே கருத்துக் கூற முடியும் எனவும் தொிவித்து விட்டனா்.
குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற உழியா்களுக்கு அடிப்படைச் சம்பளம் 11500 உட்பட இதர படிகளுடன் மொத்தமாக 13750 ரூபா சம்பளம் கிடைப்பதாகவும் வாரத்தில் ஆறு நாட்களும் காலை 7.24 மணி முதல் மாலை 5.30 மணி வரை பணியாற்ற வேண்டும் என்றும் மாதத்தில் சம்பளத்துடன் ஒரு நாள் விடுமுறையே வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கும் ஊழியா்கள் இதனை தவிர மேலதிகமாக ஒரு நாள் விடுமுறை பெற்றுக்கொண்டாள் வரவுக்கான கொடுப்பனவு ஆயிரம் கிடைக்காது எனவும் தொிவிக்கின்றனா்.
மேலும் காலை 7.24 முதல் மாலை 5.30 மணிவரையான பத்து மணித்தியாலம் வேலை செய்யும் நேரத்தில் 30 நிமிடங்கள் உணவுக்கும் 15 நிமிடங்கள் தேனீர்க்கும் வழங்கப்படுகிறது எனவும் குறிப்பிடுகின்றனா்.
0 comments: