தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்ப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments