முஸ்லிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றியது இனச்சுத்திரிப்பு அல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கூறுவதானது இறுதிப் போரானது தமிழ் மக்களை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றுவதற்காக நடத்திய மனிதாபிமானப் போர் என்று மகிந்த ராஜபக்ஷ கூறுவதைப் போல் உள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்து தொடர்பாகவே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியமைக்குத் தமிழ் மக்கள் ஒருபோதும் வெட்கித் தலைகுனியத் தேவையில்லை. இது இனச் சுத்திரிப்பு அல்ல. இனப்பாதுகாப்பே என அரியநேத்திரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. இக்கருத்துக்குப் பதில் கருத்தாகவே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
அரியநேத்திரன் கூறுவதும் மனிதாபிமான போரைச் செய்வதாகக் கூறிய மகிந்தவினது கூற்றும் ஒரே மாதியானவை என்றும் அவர் தெரிவித்தார்.


0 Comments