கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் மூன்றாவது மேடையில் பொறுத்தப்பட்டிருந்த டிஜிட்டல் தொலைக்காட்சி பெட்டிகள் இரண்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக ரயில்வே திணைக்கள் ஊழியர்கள் 5 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தொலைக்காட்சி பெட்டிகள் காணாமல் போயிருந்த நிலையில் அது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த திணைக்கள அதிகாரிகள் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கமரா காட்சிகள் மூலம் அந்த சம்பவத்துடன் குறித்த 5 பேரும் தொடர்புபட்டிருந்தமையை கண்டு பிடித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை பணியிலிருந்து நீக்கியுள்ள அதிகாரிகள் அது தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


0 Comments