Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை- மண்ணுக்குள் மூன்று சிறுவர்கள் புதையுண்டனர்

தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கேகாலை, இரத்தினபுரி, மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமே இவ் எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
மேலும், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, மக்கள் மின்னல் மூலம் ஏற்படுகின்ற அபாயங்களில் இருந்து  பாதுகாத்துக்கொள்ள, முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மண்ணுக்குள் மூன்று சிறுவர்கள் புதையுண்டனர்
அதிக மழைவீழ்ச்சி காரணமாக வரகாபொல தாங்கல பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டின் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் சிறுவர்கள் மூவர் புதையுண்டனர்.
பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் முறையே 5,11,15 வயதுகளையுடைய மூன்று சிறுவர்கள் வரக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒரு சிறுவன் ஒருவன் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments