காலி மாமோதரை வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஒன்றின் வாயில் இறந்த கரு ஒன்று இணைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் வைத்தியர்கள் அதனை கருவை அகற்றி குழந்தை வாயை திறந்து மூடவும் சுவாசிக்கவும் முடியும் வகையில் சத்திரசிகிச்சையை வெற்றிக்கரமாக செய்துமுடித்துள்ளனர்.
கடந்த 26ம் திகதியன்று இந்த குழந்தை பிறந்தபோது அதன் வாயில் இறந்த இரட்டை குழந்தைக்கான கரு இறந்த நிலையில் இணைந்திருந்தது.
இதன் காரணமாக குறித்த குழந்தை சுவாசிக்க கஸ்டத்தை எதிர்நோக்கியது.
இதனையடுத்தே சுமார் 90 நிமிட சத்திரகிசிச்சையின் பின்னர் குழந்தையின் வாயில் இருந்த மேலதிக உறுப்பு அகற்றப்பட்டது.


0 Comments