மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் மட்டும் பகிர்ந்தளிக்கப்பட்டால் போதுமானது என்று முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் வலியுறுத்தியுள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று அவர் வழங்கிய விசேட நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள கருணா அம்மான், மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று பலரும் கோரிக்கை வைக்கின்றார்கள். ஆனால் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படத் தேவையில்லை.
ஆனால் மத்திய அரசாங்கத்திடம் இருக்கும் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். மேலும் இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்பதற்கு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் கருணா அம்மான் வலியுறுத்தியுள்ளார்
0 Comments