முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பினை இலக்காகக் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் விசேட செயலமர்வு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் நிகழ்ச்சித் திட்டத்துக்கமைவாக முன்பள்ளி ஆசிரியர்களை கவின் கலை செயற்பாடுகளில் ஊக்குவிக்கும் முகமாக இந்தப் பயிற்சிச் செயலமர்வு நடைபெற்றது. இந்நிகழ்வில்இமண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ. நவேஸ்வரன்இ சிறுவர் பெண்கள் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிளான் ஸ்ரீ லங்கா நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். -
0 Comments