பல விசேட காவல்துறை குழுக்கள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சம்பவத்துடன் தொடர்படையவர்களை விரைவில் கைது செய்ய முடியும் என சிரேஸ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கம்பஹா - திவுலப்பிட்டிய - கொடதெனிய பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலம் உறவினர்களிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டுள்ளது.
5 வயதான குறித்த சிறுமியின் பிரேத பரிசோதனையின்போது அவர் கழுத்து நெறித்து கொல்லப்பட்டமையும் அவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கம்பஹா - திவுலப்பிட்டிய - கொடதெனிய பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலம் உறவினர்களிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டுள்ளது.
5 வயதான குறித்த சிறுமியின் மரணம் கழுத்து நெறிப்பட்டமையால் ஏற்பட்டுள்ளதாக பிரேதபரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்பட்ட இந்த சிறுமி பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்
இந்தநிலையில், மரணித்த சிறுமியின் பிரேத பரிசோதனையின்போது அவர் கழுத்து நெறித்து கொல்லப்பட்டமையும் அத்துடன் அவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சிறுமியின் சடலம் உறவினர்களிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளன.
0 Comments