ஆப்கானிஸ்தானில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு 100 சவுக்கடி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண் மற்றும் ஆண் ஆகியோர் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருவருக்கும் 100 சவுக்கடி தண்டனையாக விதிக்கப்பட்டது.
அதன்படி பலரும் கூடியிருந்த இடத்தில் பார்தா அணித்த அந்த பெண் முழங்கால் இட கட்டாயப்படுத்தப்பட்டார்.
பின்னர் மிருகத்தின் தோலினால் செய்யப்பட்ட சவுக்கால் அவருக்கு 100 அடி வழங்கப்பட்டது.
இந்த தண்டனை முழுவதும் அரசாங்கத்தின் ஆதாரவுடன் தான் வழங்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக அம்மாகாண ஆளுநரின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை ஷரியா சட்டத்தின்படி வழங்கப்பட்டது.
இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். -
0 Comments