வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வேளான்மை வெட்டும் இயந்திரத்தின் டயர் காற்றுப் போனதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வேளையில் சந்திவெளியிலிருந்து பனிச்சங்கேணிக்கு வியாபாரத்துக்காக மீன் எடுப்பதற்கு சென்று கொண்டிருந்தவரின் மோட்டார் சைக்கிள் வேளாண்மை வெட்டும் இயந்திரத்துடன் மோதியது.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் தலையில் அடிபட்டு மரணமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்திவெளியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அழகையா ராஜேஸ்வரன் (வயது 41) என்பவரே இந்த விபத்தில் மரணடைந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








0 Comments