மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் அமைதியான முறையில் பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.
மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளில்
வாக்களிப்பு இடம்பெறுகின்றது.
காத்தான்குடியிலுள்ள ஹிழுறியா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வாக்களித்தார்.
மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் பி.செல்வராஜா வாக்களித்தார். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பி.பிரசாந்தன் ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.
மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது. இம்மாவட்டத்தில் 5 உறுப்பினர்களைத்தெரிவு செய்ய 368 பேர் போட்டியிடுகின்றனர். 16 அரசியல் கட்சிகளும் 30 சுயேச்சைக்குழுக்களும் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றன.
0 Comments