எனக்கு எதிராக உண்மைக்கு புறம்பான செய்திகளை சிலர் வெளியிட்டுவருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில்,
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா அம்மான்)மாலை அணிவித்து வரவேற்று பிரச்சாரத்திற்கு வீடு வீடாக அழைத்துச் செல்வதாக சில கைக்கூலிகளின் இணையத்தளங்களில் வெளியான செய்தியானது உண்மைக்குப் புறம்பானது.
எனது அரசியல் செல்வாக்கையும், மக்கள் என் மீது கொண்ட நம்பிக்கையையும் சீர்குலைக்கும் நோக்கில் சில கட்சியினர் மற்றும் சுயேட்சைக் குழுவினரின் திட்டமிட்ட செயற்பாட்டினால் கணனி மூலம் வடிவமைக்கப்பட்டு கருணாவுக்கு மாலை போடுவது போன்று படத்தை வெளியிட்டுள்ளர்.
நான் அண்மையில் தெரிவித்திருந்தேன் கருணா மற்றும் பிள்ளையான் இருவரையும் சிறையில் அடைத்தே தீருவேன் என்று. இதை நான் விரைவில் நிறைவேற்றுவேன். அப்படியிருக்கும் நான் எவ்வாறு இவ்வாறான செயலை செய்ய முடியும்.
கருணா என்றழைக்கப்படுகின்ற வி.முரளிதரன் தற்போது பிள்ளையான் செய்த கொலைகளை சுட்டிக்காட்டி வருகின்றார். இவர்கள் இருவரும் கடந்த காலங்கள் செய்த கடத்தல்கள், கொலைகள், கொள்ளைகள் சம்பந்தமாக காணாமல் போன உறவுகள் சிலர் என்னிடடம் தெரிவித்துள்ளனர்.
அதனை வைத்துக் கொண்டு இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பேன்.
எனவே என் அன்புக்கினிய தமிழ் மக்களே தங்களால் எனக்கு வழங்கப்படுகின்ற ஆதரவை சீர்குலைப்பதற்காக விசமத்தனமாக செய்யும் போலிப் பிரச்சாரங்களை கண்டு நீங்கள் ஏமாறாமல் தங்கள் ஆதரவை நீங்கள் எனக்கு வழங்குகள், உங்கள் மூலமாகவே நான் இவர்களை சிறையில் அடைப்பேன் என்பதை உறுதி கூறுகின்றேன் என்றார்.


0 Comments