கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கிட்டங்கி வாவியில் தனது நண்பர்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை நீராடிக்கொண்டிருந்த சேனைக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த த.லுக்சாந்த் (வயது –16) என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கல்முனை பொலிஸாருக்கும்; கடற்படையினருக்கும் தகவல் வழங்கிய நிலையில், ஒலுவில் கடற்படை முகாம் சுழியோடிகள் சடலத்தை மீட்டுள்ளனர். இவர் கல்முனை இராமகிருஸ்னமிசன் கலவன் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments