Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இந்தியச் செய்தி மூச்சுத்திணறலால் பிரபல நடிகை மரணம்

பிரபல தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வால் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழில் பம்பர கண்ணாலே படத்தில் அறிமுகமாகி, ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்தவர் ஆர்த்தி அகர்வால் (31). அதன்பின்னர், தமிழில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால், தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
தெலுங்கில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், கடந்த 2007 ஆம் ஆண்டு அமெரிக்க தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆனார்.
இவரின் உடல் எடை அதிகரித்ததால் ‘லிபோசக்‌ஷன்’ என்ற கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
ஆனால், அறுவை சிகிச்சை பலன் அளிக்காததுடன், அவருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டது. இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை ஆர்த்தி அகர்வாலுக்கு அதிகளவில் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளித்தும், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Post a Comment

0 Comments