Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் கண்ணகி இலக்கியவிழா இன்று ஆரம்பம்.

ஐந்தாவது கண்ணகி கலை இலக்கிய விழா இன்று (13) சனிக்கிழமையும் நாளை (14) ஞாயிற்றுக்கிழமையும் மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. கண்ணகி கலை இலக்கியக் கூடல்' அமைப்பினால் 2011 இல் ஆரம்பித்து ஆண்டுதோறும் கிழக்கிலங்கையின் வேறு கிராமங்களில் நடத்தப்பட்டுவரும் கண்ணகி கலை இலக்கிய விழாத் தொடரின் 05 ஆவது தொடர் இதுவாகும் என கண்ணகி கலை இலக்கியக் கூடலின் தலைவர் செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் மாபெரும் பண்பாட்டுப் பாரம்பரிய இலக்கிய விழாவான இந்நிகழ்வு இலக்கிய ஆர்வலர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்களுடன் இடம்பெற்று வரும் இக்கண்ணகி இலக்கிய விழா கடந்த காலங்களில் மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு, ஆலையடிவேம்பு, தம்பிலுவில், ஆகிய பிரதேசங்களில் கோலாகலமாக இடம்பெற்றிருந்தது.
இம்முறை 05 ஆவது விழா வந்தாறுமூலையிலே இடம்பெறவிருக்கிறது. 

Post a Comment

0 Comments